Breaking News

கனமூலை தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் புதிய வீடு கையளிப்பு

மதுரங்குளி கனமூலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பம் ஒன்றுக்கு கனமூலை தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தினால் புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.


கனமூலை தெற்கு கிராம சேவகர் பிரிவில் வீடற்ற நிலையில் ஓலைக் குடிசையில் வாழ்ந்து வந்த சித்தி ஹனீனா உம்மா குடும்பத்திற்கே புதிய வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.


கனமூலை தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்கள், தனவந்தர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரிடம் பெறப்பட்ட நிதி உதவியில் இந்த புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


கனமூலை தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன்புரிச் சங்கத் தலைவர் எம்.எஸ்.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற புதிய வீட்டை பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வில் கனமூலை பெரியபள்ளி நிருவாக சபையின் தலைவர் என்.எம்.ஏ.பஸீர் பிரதம அதிதியாகவும், கனமூலை பெரியபள்ளி நிருவாக சபையின் செயலாளரும் , அதிபருமான என்.எம்.எம். நஜீப் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டதுடன், நலன்புரிச் சங்க ஆலோசனை சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.


அதேவேளை, குறித்த குடும்பத்திற்கு தேவையான சில பொருட்களும் இதன்போது அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







No comments