Breaking News

கனமூலை தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன் புரிச் சங்கம் விடுக்கும் இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

இஸ்லாமிய புதுவருடம் அமைதி, சாந்தி சமாதானம் என்ற தூதை சுமந்து வருகிறது. முஹர்ரம் இஸ்லாமிய புத்தாண்டு சத்தியம் மேலோங்கி அமைதி நிலவிய மாதம். ஆம் மூஸா (அலை) அவர்கள் காப்பாற்றப்பட்ட மாதம் கூட முஹர்ரம் தான். 


புனிதம் நிறைந்த இந்த மாதத்தில் உறவுகளை சீர்செய்வோம். பகைமை மறப்போம். அடுத்தவர்களை மன்னிப்போம். தள்ளிவைத்த உறவுகளை கிட்ட எடுத்து பாராட்டுவோம். எரிச்சல் தரும் சிந்தனைகளை, கருத்துக்களை முன்வைத்த சகோதரர்களையும் விரிந்த உள்ளத்தோடு விட்டுக் கொடுத்து அன்பாக பழகுவோம்.

மலர்ந்துள்ள புத்தாண்டின் முதல் மாதம் பகைமறப்பு மாதம் என்ற உணர்வை முதலில் உள்ளத்தில் உயிர் வாழவைப்போம். அதன்பிறகு நடத்தையில் கொண்டுவருவோம்.



எமது குழந்தைகளுக்கு இது அமைதியை சுமந்து வரும் புத்தாண்டு என்பதை அழியாத வடுக்களாக நினைவில் கொள்ள வழிவகுப்போம். முஹர்ரம் ஒரு கொள்கையின் வெற்றிச் சின்னம். சாந்தி சமாதானம் அமைதி அன்பு அதன் பெறுமானங்கள். இனி துன்பமில்லை துயரமில்லை என்று நம்புவோம். அந்த கொள்கை வாழ எம் வாழ்வை அர்பபணிப்போம். சமூகம் நிம்மதியாக வாழ எமது நிம்மதியை நாம் இழப்பாபோம். அப்போது அமைதி என்றும் நிலைக்கும்.


யாஅல்லாஹ்! இந்த சிறப்பான நாளில் முஸ்லிம் உம்மத்துக்கு நன்மையையே நாடுவாயாக! எமது சமூகத்தின் தொடர் துயரங்களுக்கு முற்றுப் புள்ளியாக இந்த நாளை ஆக்குவாயாக! ஆமீன்



கனமூலை தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன் புரிச் சங்கம்.




No comments