புத்தளம் முக்கூட்டுத் தலைமை விடுக்கும் முக்கிய அறிவித்தல்
அன்பின் ஜமாத்தார்களுக்கு , அனலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாது -
புத்தளம் பெரிய பள்ளி , புத்தளம் ஜம்இய்யதுல் உலமா , புத்தளம் நகர சபை கூட்டாக இணைந்து விடுக்கும் முக்கிய அறிவித்தல்
சற்று தாமதித்து செவிமடுத்துச் செல்லுங்கள்.
அண்மித்துவிட்ட “ டெல்டா வேரியன்ட்ட" ஆபத்து பராமுகம் தவிர்ப்போம்
ஜமாத்தார்களே ! டெல்டா வேரியன்ட் 50 வீதம் வேகமாய் பரவக்கூடியது . சிறியோர் , பெரியோர் என பாகு பாடு பாராமல் தொற்றக்கூடியது . மேற்படி வைரஸினால் பாதிப்படைந்த நோயாளிகளினால் நாட்டின் பிரசித்தம் பெற்ற அரச மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன. நோயாளிகள் தூங்குவதற்கு கட்டில் பற்றாக்குறை காரணமாக அவதியுறுகின்றனர். ஒரு நாளில் சுமார் 110 பேர் அளவில் மரணமடைகின்றனர். ஒரு நாளில் சுமார் 150 பேர் மரணிக்கக்கூடிய ஆபத்து இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. எனவே கண்ணியமிக்க பெரியோர்களே ! சகோதரர்களே ! பின்வரும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து உயிராபத்தை தவிர்துக்கொள்ளுங்கள்.
1. அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியே செல்லாதீர்கள் சந்திப்புக்களையும் உறவுகளை நாடிச் செல்வதையும் முடியுமானவரை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
2.மார்க் அணிவதையும் சமூக இடைவெளி பேணுவதையும் எங்கு சென்றாலும் மறந்துவிடாதீர்கள்
3.திருமண வீடுகளிலும் திருமண மண்டபங்களிலும் 50 நபர்களை விட அதிகமானோர் ஒன்று கூடுவதை கட்டாயமாக தவிர்த்துக் கொள்ளுங்கள்
4.ஐவேளைத் தொழுகை மற்றும் ஐந்து தொழுகைகளின் போது சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ள 100 நபர்களை விட அதிகமானோர் பள்ளிவாயலில் ஒன்று கூடாதீர்கள், ஜூம்ஆ பிரசங்கம் நிகழ்த்தக்கூடிய உலமாக்கள் உங்கள் பிரசங்கத்தை மிக சுருக்கமாக ஆக்கிக்கொள்ளுங்கள்.
குறித்த பள்ளிவாயலில் ஜூம்ஆ தொழுவதற்கு சந்தர்ப்பங்களை இழந்தவர்கள் அதற்கு பகரமாக முஹர் தொழுவதே மார்க்க கடமையாகும். ஜனாஸா நல்லடக்கத்தின்போது சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட 25 நபர்களை விட அதிகமானோர் பள்ளிவாயலிலும் மையவாடியிலும் ஒன்று கூடுவதை தவிர்த்த்துக்கொள்ளுங்கள்.
ஜனாஸா வீட்டுக்கு செல்லும்போதும் இதே ஒழுங்கை பேணிக்கொள்ளுங்கள்.
5.ஜனாஸா நல்லடக்கத்திற்காக வருகை தருவோர் ஜனாஸா தொழுகையில் மட்டும் கலந்துகொண்டு ஒரு உஹது மலையளவு நன்மைகளை பெற்றுச் செல்லுங்கள். ஜனாஸாவின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் நல்லடக்க காரியங்களில் ஈடுபடுங்கள்
6.கண்ணியமிக்க உலமாக்களே ! மையவாடியில் பயான் செய்வதை சிறிது காலத்திற்கு தற்காலிகமாக இடைநிறுத்திவிட்டு , மையித்திற்காக துஆ செய்துவிட்டு செல்லுமாறு மக்களுக்கு உபதேசியுங்கள்.
பயான் செய்வது ஜனாஸாவுக்குகான பர்ளு அல்ல என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இந்த சட்ட அந்தஸ்த்தை பொது மக்களுக்கு விளங்கப்படுத்துங்கள்.
7.ஆற்றுக்கு கூட்டம் கூட்டமாகச் சென்று நோய் தொற்றை விலைக்கு வாங்கி வருவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்
8.இளைஞர்களே ! பஸாரிலும் பொது இடங்களிலும் சுற்றித்திரிவதையும் ஒன்று கூடுவதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்
09.அடிக்கடி கைகளை கழுவிக்கொள்ளுங்கள். கைகொடுப்பதையும் முஆனகா செய்வதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
10.இதுவரை கோவித் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் சந்தர்ப்பம் வாய்க்கும் போது ஏற்றிக்கொள்ளுங்கள் . இதுவே காலம் வேண்டி நிற்கின்ற மார்க்க கடமையாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேற்படி விதிமுறைகளை புறக்கனிப்போர் நாட்டு சட்டங்களுக்கு துரோகம் விளைவிக்கின்றனர். மேலும் மார்ரக்கத்தின் பெயரால் அநியாயம் இழைக்கின்றனர்.
அரசாங்கத்தின் பாதுாப்பு விதிமுறைகளை மீறுவோர் கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவீர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள் . அல்குர்ஆனில் " ஒரு உயிரை நியாயமின்றி கொலை செய்தவன் முழு மனித சமுதாயத்தையும் கொலை செய்தவன் ஆவான். ஒரு உயிரை வாழ வைத்தவன் முழு மனித சமுதாயத்தையும் வாழ வைத்தவன் ஆவான் " என அல்லாஹ் குறிப்பிடுகின்றான் . ( அல் மாயிதா : 32 )
நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் " தனக்குத் தானே ஆபத்தை ஏற்படுத்தவும் கூடாது . பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்தவும் கூடாது " ( இப்னு மாஜா, தாரகுத்னி )
வஸ்ஸலாம்
இப்படிக்கு முக்கூட்டுத் தலைமை
2021.O8.I3
நன்றி

No comments