பு/கடையாமோட்டை தேசிய பாடசாலையின் சுற்று மதில் பூசுவதற்கான அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
கடையாமோட்டை தேசிய கல்லூரியின் சுற்று மதில் மிகநீண்ட காலமாக சுத்தமின்றி, பூசப்படாமல் கவனிப்பாரற்று கிடந்தது.
இதனை கருத்திற் கொண்ட 1992 - 1994 ஆம் ஆண்டு (Batch) கடையாமோட்டை தேசிய கல்லூரியின் இரண்டாவது க.பொ.த. உயர் வகுப்பு மாணவர்கள் மூலம் நிதி திரட்டப்பட்டு அதற்கான ஐம்பத்தியைந்து (55) சீமெந்து பக்கட்டுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக அவர்களுடைய வகுப்பாசிரியரும் பாடஆசிரியருமான அஷ்ஷெய்க் எம்.எச்.ஹனஸ்மொஹிதீன் (நளீமி) மற்றும் பொருளியல் பாடஆசிரியரான அஷ்ஷெய்க் எஸ்.ஏ.சலாஹுதீன் (நளீமி) அவர்களும் பங்கேற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வு கல்லூரியின் அதிபர் எம்.எச்.தௌபீக் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்பத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது இவர்களின் சேவையை பாராட்டி பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் இவ்விரு ஆசிரியர்களுக்கும் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது சீமெந்து பக்கட்டுகளை உத்தியோகபூர்வமாக பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளரும், முந்தல் மதுரங்குளி பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவருமான ஏ.எச்.எம்.ஹாரூன் அவர்களிடம் ஆசிரியர்கள் மூலம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அன்றைய வகுப்பு மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
1992 - 1994 Batch மாணவர்கள்
1.எம்.எச்.தௌபீக்
2.ஏ.எச்.பௌசுல்
3.ஏ.ஏ.அஷ்ரப்
4.எப்.பதாஹ்
5.எஸ்.எச். சாலிஹீன்
6.எம்.ஐ.இமாமுஸ் சாம்
7.எம்.சுஐப்
8.ஏ.எம்.மும்தாஸ்
9.எம்.அனஸ்
10.எம்.அஸ்கர்
11.எம்.ஐ.றிஸ்வானா
12.எப்.சுபைரா
13.எப்.நபீலா
K.N.C. MEDIA UNIT








