இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் - மு.மா.ச. உறுப்பினர் ஏ.எச்.எம்.றியாஸ்
எம்மை வந்தடைந்துள்ள இந்த இஸ்லாமிய புதுவருடத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் அதேவேளை அழகான திட்டமிடல்களுடன் எமது அமல் இபாதத்துக்களை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்வோமாக.
சர்வதேசத்திலும்,எமது தாய் நாட்டிலும் கொரோனா எனப்படும் இந்த கொடிய தொற்று நோயினால் மக்கள் சொல்லொனாத் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.எனவே இந் நோய் எம் நாட்டை விட்டும் மட்டுமல்லாது முழு உலகத்தை விட்டும் விலகிச் சென்று விட இரு கரம் ஏந்தி இறைவனிடம் பிரார்த்திப்போமாக.
ஒரு வருடம் எம்மை விட்டு கடந்து சென்று விட்டது என்றால் அந்த வருடம் திரும்பவும் எம்மை வந்தடையாது.காலம் பெறுமதியானது என்பதனை அறிந்த நாம் அமல்களையும் அதிகப்படுத்தி இறைவனின் பக்கம் நெருக்கத்தை அதிகரிப்போமாக.
ஏ.எச்.எம் ரியாஸ்,
முன்னாள் மாகாண சபை உறுப்பினர்,புத்தளம் மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளர் மற்றும் கெளரவ அமைச்சர் அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா அவர்களின் இணைப்புச் செயலாளர்.

No comments