Breaking News

அதிபர், ஆசிரியர் போராட்டம் என்பது வெறுமனே வேதனப்படி உயர்விற்கானதல்ல - ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஏ.நாகராஜா

தற்போது தீவிரமடைந்துள்ள அதிபர், ஆசிரியர் போராட்டம் பற்றி சமூகத்தின் பலதரப்பினர் பல்வேறுபட்ட கருத்துக்களையும்,விமர்சனங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர். 


இலங்கை ஆசிரியர் சேவையானது 1994 ஆம் ஆண்டு பல போராட்டங்களுக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டது.


மருத்துவர், சட்டத்தரணியர், பொறியியலாளர், கணக்காளர் போன்ற தொழில்கள் வாண்மைத்துவம் பொருந்தியதாக கருதப்பட்டு, அத் துறையினர் சேவைத் துறைக்குள் உள்வாங்கப்பட்ட போதும் ஆசிரியர் தொழிலின் வாண்மைத்துவம் பற்றிய முரண்நிலைகளினால், அத்துறை சேவை துறைக்குள் உள்வாங்கப்படவில்லை,உயர்கல்வித்துறையிலுள்ள பேராசிரியர், விரிவுரையாளர்,கல்வியியலாளர் போன் றோரும் வாண்மைத்துவம் வாய்ந்த தொழில் பிரிவினராக கருதப்படுகின்ற 

னர்.


இவ்வாண்மைத்துவம் கொண்டுள்ள பண்புகள்- தொழிலின் வரையறைகள் தெளிவாக இருத்தல், தொழிலுக்கான நிபுணத்துவக்கோட்பாட்டு அறிவைக் கொண்டிருத்தல்,சமூக உத்தரவாதத்தைக் கொண்டிருத்தல்,முறைசார் தொழிற் பயிற்சிகளை நீடித்து பெறல், தொழிலுக்கான கலாசார பண்புகளை பின்பற்றல்,சட்டவலிமை பெற்றிருத்தல் பயனாளிகள்,வாடிக்கையாளரின் தேவைகளை நிறைவேற்றல்,கடுமையான ஒழுக்க நியமங்கள், ஒழுங்குகளை பின்பற்றல் இவ்வாறான பண்புகளை வாண்மைத்துவத்தொழில் கடைப்படிக்க வேண்டும்.


ஆசிரியர் தொழிலும் இவ்வாண்மைகள் பெற்றே சேவைத்துறையாகியது. ஆயினும், ஆசிரியர்சேவையானது கடந்த 24 ஆண்டுகளாக உறுதிப்படுத்தப்படாது, அதில் குறிப்பிட்டுள்ள வேதனப்படிகள், வேதன உயர்வுப்படி, தொழிற்கல்வி படியேற்றம், பதவி உயர்வு, சேவைத்தர உயர்வு எதுவும் பின்பற்றப்படாமல் பல அரசாங்கங்களின் புறக்கணிப்பிற்குள்ளாகி புறந்தள்ளப்பட்டது.


குறிப்பாக ஏராளமான ஆசிரியர்களுக்குரிய வேதன உயர்வுப்படிகளுக்கான கோடிக்கனக்கான நிதியை அரசு சுரண்டி,களவாடி 

உள்ளது.


ஓய்வு பெற்ற பெருந்தொகையான ஆசிரியர்கள் தாம் அரசாங்கத்தினால் மோசடித்தனமாக ஏமாற்றப்பட்டோம் என்பதை உணராமலே,அல்லது சட்டரீதியான வலிமையற்று ஓய்வு பெற்றுள்ளனர்.


இப்போராட்டம் வெறுமனே வேதனப்படி உயர்விற்கானதல்ல, மாறாக தமது தொழிலுக்கான சட்டரீதியான வலிமையையும், முறைப்படியான சகல உயர்வுகளையும், வேதனங்களையும் உறுதிப்படுத்தும் சட்டமுறையான அரச ஆங்கீகாரத்துக்கானதாகும்.


உயர்தொழிலுக்கான வாண்மைத்துவ மதிப்பு நிதி சார்ந்த வகையிலும் நிலைநாட்டப்படவேண்டும். 


ஒவ்வொரு உயர்தொழிலிலுள்ளவர்கள் வேதன உயர்வுகளை,வேதன அடிப்படைகளை இலட்சக்கணக்காக அள்ளிக் கொண்டு செல்லும் போது சமுகமாற்றத்தை அறிவு சாரந்த தொழிற்பாடாக கல்விப்பணி மூலம் வழங்கும் ஆசிரியர்கள் மாத்திரம் சமூக ரீதியாக இழிவாகவும், ஏளனமாகவும் நகையாடப்பட்டு கடுமையாக குற்றம் சாட்டப்படுவதில், ஒப்பீட்டுரீதியாக சரியாகப் படவில்லை. 


சமூகம் ஆசிரியர் அதிபர் போராட்டத்தை ஆதரித்து வலிமையாக்குவது அவர்தம் கடமையாகும்.


ஆக்கம் திரு.எம்.ஏ.நாகராஜா -ஓய்வு பெற்ற அதிபர், புத்தளம் இந்து கல்லூரி




No comments