Breaking News

கடையாமோட்டை தேசிய கல்லூரி அதிபரின் அயராத முயற்சியினால் 300 அடி நீளமான சுற்றுமதில் அமைகிறது.

பு/கடையாமோட்டை தேசிய கல்லூரி அதிபர் எம்.எச்.தௌபீக் அவர்களின் அயராத முயற்சியினால் சுமார் 300 அடி நீளமான சுற்றுமதில் அமைக்கும் திட்டம் இன்று (18) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.


இத்திட்டமானது அதிபரின் தலைமையில் ஊர் தனவந்தர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றுவருகின்றது. 


கல்லூரியின் அதிபர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கற்றல், கற்பித்தலுக்கு  மேலாக பாடசாலையின் பௌதீக வளத்தை அதிகரிப்பதில் தனியாக நின்று தன்னை அர்பணித்து வருகின்றார். இவ்வதிபரின் காலத்தில் பாடசாலையின் பௌதீக வளம் இதுவரை கண்டிராத அளவு வளர்ச்சி பெற்று வருகின்றது    (பாடசாலை முகப்பு, கட்டிடம், நீர் வசதி, மல சல கூடம், பெண்களுக்கான தனியான தொழுகை அறை...) போன்றவை குறிபிடத்தக்க அம்சமாகும். 


கல்லூரி அதிபரின் இச்செயற்திட்டத்திற்கு பாடசாலை முகாமைத்துவ குழு, ஆசிரியர் குழாம், பாடசாலை அபிவிருத்தி சங்கம், கல்வி அபிவிருத்திக்குழு, பழைய மாணவர்கள் ஆகியோர் கைகோர்த்துள்ளனர்.

எனவே அவருடைய இத்திட்டம் அல்லாஹ்வின் உதவியால் நிறைவடைய பிராத்திப்போம். அதே நேரம் அதிபரின் இம்முயற்சியை பாராட்டுவோம்.


இச்சுற்றுமதிலானது பாடசாலையையும், விளையாட்டு மைதானத்தையும் பிரிக்கும் வகையில் அமையப்பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


ஊடகப் பிரிவு

கடையாமோட்டை தேசிய கல்லூரி.










No comments