Breaking News

தமிழக வக்ஃப் வாரியத் தலைவராக அப்துல் ரஹ்மான். - மு. கா. தலைவர் ஹக்கீம் வாழ்த்து தெரிவிப்பு

தமிழ் நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவராக முன்னாள் இந்திய லோக் சபா பாராளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில முதன்மைத் துணைத்  தலைவருமான எம். அப்துல் ரஹ்மான், அதன் ஏனைய உறுப்பினர்கள் முன்னிலையில் வியாழக்கிழமை (22) பதவியேற்றிருப்பது குறித்து தாம்  பெரிதும் மகிழ்ச்சியடைவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


 அத்துடன் , முன்னாள் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவர் மர்ஹூம் சிராஜூல் மில்லத் எம். கே. அப்துஸ் ஸமது அவர்களின் புதல்வியும், நாடறிந்த மேடைப் பேச்சாளரும்,எழுத்தாளரும், சிறந்த சமூக சேவையாளருமான பாத்திமா முஸப்பர் மீண்டும் தமிழக அரசு வக்ஃப் வாரியத்திற்கு தெரிவு செய்யப்பட்டி ருப்பது குறித்தும், இலங்கையின் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.


 தமிழக அரசு வக்ஃப் வாரியத்திற்கு நியமிப்பதற்கு இவர்களை  முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு விதந்துரைத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முனீருல் மில்லத் கே.எம். காதர் மொகிதீனுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நன்றி தெரிவித்துள்ளார்.


 தமிழ் நாடு வேலூர் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த நண்பர் அப்துல் ரஹ்மான்,  தாம் அந்த பதவியை வகித்த காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட  தரப்படுத்தலில் ,அகில இந்திய அளவில் சிறந்த உறுப்பினருக்கான 6ஆவது இடத்தையும் தமிழக மட்டத்தில் 5ஆவது இடத்தையும் உயர் விருதாகப் பெற்றிருந்ததும் குறிப்பிட்டு கூறத்தக்கவையெ ன்றும் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார். 


 பொருளாதாரத்திலும், கணனித் துறையிலும் உயர் தகைமைகள் பெற்ற அப்துல் ரஹ்மான் துபாய் நாட்டில் இஸ்லாமிய வங்கித் துறையில் மிக முக்கிய பதவிகளை வகித் துள்ளதோடு, பிரபல "மணிச் சுடர் " நாளிதழ் மற்றும் "பிறை மேடை" இதழ் ஆகியவற்றின் வளர்ச்சியில் தம்மை பெரிதும் ஈடுபடுத்தியுள்ள தலை சிறந்த ஊடகவியலாளருமாவார். 


இறைவன் அருளால் இத்தகையோரின் ஆளுமை மிக்க பங்குபற்றுதலுடனும்,  வழிகாட்டுதல்களுடனும் தமிழக அரசு வக்ஃப் வாரியம் திறன்பட செயற்படும் எனவும் ரவூப் ஹக்கீம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.




No comments