Breaking News

கடையாமோட்டை தேசிய பாடசாலைக்கு அரை ஏக்கர் காணி அன்பளிப்பு!

கடையாமோட்டை தேசிய பாடசாலைக்கு ஏ.டப்ளிவ்.எம்.நாளீர் (காலி நானா) அரை ஏக்கர் காணியை அன்பளிப்பு செய்துள்ளார்.


கடையாமோட்டை தேசிய பாடசாலைக்கு மேற்கு பகுதியில் (மூன்று மாடி கட்டிடத்தின் பின் பகுதி) காணப்படும் அரை ஏக்கர் காணியை கொள்வனவு செய்வதற்காக பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளரும் முந்தல், மதுரங்குளி பல நோக்கு கூட்டுறவுச் சங்க தலைவருமான ஏ.எச்.எம்.ஹாரூன்  தலைமையில் பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம்.தௌபீக், ஆசிரியர்களான ஏ.எச்.பௌசுல், ஏ.ஏ.அஷ்ரப் மற்றும் பழைய மாணவர் சங்க செயலாளர் ஜே. ஜெஸீர் ஆகியோர் இன்று (11) காணி உரிமையாளர் ஏ.டப்ளிவ்.எம்.நாளீர் (காலி நானா) அவர்களின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.


அவ்வேளை காணி உரிமையாளர் நாளீர் அவர்கள் பாடசாலைக்கு காணியை விற்பதற்கு நான் தயாரில்லை நான் காணி கொள்வனவு செய்தது எனது பிள்ளைகளுக்காக எனது பிள்ளைகளை விட ஏழை மாணவர்கள் கல்வி கற்பதே எனக்கு சிறந்தது. 


எனவே அக்காணியை அன்பளிப்பாக பாடசாலைக்கு வழங்குகின்றேன் என்று வாக்குறுதியளித்துள்ளார். இன்று முதல் அக்காணி பாடசாலைக்கு சொந்தமானது என வக்பு செய்து விட்டேன். நாளை அதற்கான பூர்வாங்க வேளையை நான் செய்கின்றேன் என்றும் கூறியுள்ளார்.


அல்லாஹ்தஆலா அவருடைய நன்கொடையை பொருந்திக் கொண்டு இம்மையிலும், மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக ஆமீன்.


ஊடகப்பிரிவு கடையாமோட்டை தேசிய பாடசாலை









No comments