ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்று காலை நாடாளுமன்ற சுற்றுவட்ட வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.!!
எரிபொருள் விலையை உயர்த்திய கம்மன்பிலவை வெளியேற்றுவோம். நிவாரணத்தை குறைத்து நாட்டை அழிக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம். எனும் கருப்பெருளில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் இன்று (19) காலை நாடாளுமன்ற சுற்றுவட்ட வளாகத்தில் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமை தாங்கியதோடு ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.







No comments