புத்தளத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற அல்பா வர்த்தக நிலையத்தின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்த நகர பிதா எம்.எஸ்.எம். ரபீக் கோரிக்கை
மறைந்த முன்னாள் நகர பிதா மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் அவர்களின் சிந்தனையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற அல்பா வர்த்தக நிலையத்தின் நிர்மாணப்பணிகளை தற்போதைய நகர பிதா எம்.எஸ்.எம். ரபீக் நேரில் சென்று பார்வையிட்டதோடு நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.
இதன்போது நகர சபை உறுப்பினர்களான ரணீஸ் பதுர்தீன், பர்வீன் ராஜா உட்பட தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் சமூகமளித்தனர்.
நிர்மாணப் பணிகளைப் பார்வையிட்ட நகர பிதா இவ்வருட இறுதிக்குள் அனைத்து நிர்மாணப் பணிகளையும் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.



No comments