🔴 போதைப் பொருளுடன் தொடர்புடையோர் ஜனாஸாக்களை, முஸ்லிம் மையவாடிகளில் அடக்க அனுமதிப்பதில்லை: நிந்தவூர் பெரிய பள்ளிவாசல் அதிரடித் தீர்மானம்
நிந்தவூர்நந்தவூரில் ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினால் போதைப் பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்.
கடந்த 10.07.2021 ஆம் திகதி நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினால் போதைப் பொருட்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக பின்வரும் விடையங்களை உடனடியாக அமுலுக்கு வரும்படி நடவடிக்கை எடுக்கும் என்பதனை பொதுமக்களாகிய உங்களுக்கு அறியத்தருகின்றது .
1.போதைப் பொருட்கள் வியாபாரம் செய்யும் இல்லங்களில் நடைபெறும் திருமணத்திற்கான அனுமதி மறுக்கப்படும் .
2.ஜனாஷாக்களை நல்லடக்கம் செய்யும் காரியத்தில் பள்ளிவாசல் தனது பங்களிப்பை செய்யாது .
3.முஸ்லிம்களை அடக்கம் செய்யப்படுகின்ற அடக்கஸ்தலங்களில் இவர்களுடைய ஜனாஷாக்கள் நல்லடக்கம் செய்யப்படமாட்டாது .
4.இவர்களுடன் தொடர்புடைய ஏனையவர்களுக்கும் இதையே நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும் .
5.போதைப் பொருட்களுடன் தொடர்புடையவர்களின் பெயர்கள் வீதிகள் தோறும் காட்சிப் படுத்தப்படும்
6.இச்செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களை உயர் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி சரியான தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .
7.பேதைப் பொருட்களை விற்பனை செய்யும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் ஊரை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

No comments