JobVibe.lk - Sri Lanka Job Portal

இலங்கை மின்சார சபை பாவனையாளர் சேவை நிலையத்தின் புதிய மின் அத்தியட்சகராக கே. ஜெயராஜ் கடமையை பொறுப்பேற்றார்.

நூருல் ஹுதா உமர்  

இலங்கை மின்சார சபையின் சாய்ந்தமருது பாவனையாளர் சேவை நிலையத்தின் மின் அத்தியட்சகராக இருந்து வந்த பொறியியலாளர் ஏ.எச்.எம். பயாஸ் அவர்களின் இடமாற்றத்தை அடுத்து வெற்றிடமான சாய்ந்தமருது பாவனையாளர் சேவை நிலையத்தின் புதிய மின் அத்தியட்சகராக பொறியியலாளர் கே. ஜெயராஜ் நியமிக்கப்பட்டு கடமையை பொறுப்பேற்கும் நிகழ்வு திங்கட்கிழமை (05) சாய்ந்தமருது பாவனையாளர் சேவை நிலையத்தில் இடம்பெற்றது. 


நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் கடமையாற்றி பின்னர் கடந்த நான்கு வருடங்களாக இக்னியாகல நீர்மின் நிலையத்தில்  மின் அத்தியட்சகராக கடமையாற்றி வந்த பொறியியலாளர்  கே. ஜெயராஜ் சாய்ந்தமருது பாவனையாளர் சேவை நிலையத்தின் புதிய மின் அத்தியட்சகராக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பதவியேற்கும் இந்நிகழ்வில் இலங்கை மின்சார சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال