சமூக அநீதிகளை ஆய்வு செய்வதற்கான நிபுணர்கள் குழுவிற்கு முறைப்பாடுகளைச் சமர்ப்பித்தல்.
(றாசிக் நபாயிஸ்,
மருதமுனை நிருபர்)
கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வினை உருவாக்கும் குறிக்கோளுடனும் அதனோடு இணைந்த இடைநேர்விளைவான விடயங்களை எடுத்துரைக்கும் வகையில் கடந்த நான்கு தசாப்த காலங்களாக கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் வேறு ஏதேனும் முறையற்ற சட்டவிரோத செயற்பாடுகளின் காரணமாக வெவ்வேறு அசாதாரண சூழ்நிலைகளுக்கு பொது மக்கள் முகம் கொடுக்க நேர்ந்துள்ளது என கிழக்கு மாகாண கெளரவ ஆளுனர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
தனது அலுவலகத்திற்கு நாளுக்கு நாள் பொது மக்களால் அனுப்பி வைக்கப்படுகின்றன கடிதங்கள் வாயிலாகவே இவ்வாறான தகவல்களை வெளியிட்டுள்ளார். இதற்காக கிழக்கு மாகாணத்தினுள் ஏற்பட்டுள்ள அனைத்து வகையான சமூக அநீதிகள் பற்றிய முறைப்பாடுகள், கோரிக்கைகள் மற்றும் மேன்முறையீடுகளைப் பொது மக்களிடம் இருந்து பெற்று அவற்றின் ஆழத்தினை விளக்கி, ஆய்வு செய்து பொருத்தமான பரிந்துரைகளை வழங்கவென கிழக்கு மாகாண கெளரவ ஆளுநர் அவர்கள் நிபுணர்கள் குழு ஒன்றினை ஸ்தாபித்துள்ளார்கள்.
பொது மக்கள் தமக்கு நேர்ந்த ஏதேனும் சமூக அநீதிகளுக்காக நீதியை எதிர்பார்க்கும் எந்தவொரு தனி நபரும் அல்லது குழுவானவர்களும் அவர்கள் எந்த வகையில் பாதிக்கப்பட்டார்கள் அல்லது தொடர்ச்சியான பாதிப்புக்கு முகங்கொடுத்து வருகிறார்கள் என்னும் மனக்குமுறல்களை உறுதிப்படுத்தப்பட்ட உறுதிப்படுத்தும் சான்றுகள் அல்லது பிரதிகளுடன் ஏதேனும் பெயர் உறுதிப்படுத்தும் சான்றுகள் அல்லது அவர்களின் கோரிக்கைகளை உறுதிப்படுத்தும் துணை ஆதாரங்கள் சகிதம் அனுப்பி வைக்க முடியும்.
ஆகவே இது சம்பந்தமான முறைப்பாடுகளை உங்களது பிரதேச செயலக கிராம சேவகர் பிரிவில் தகவல்களைப் பெற்று இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் செயலாளர், சமூக அநீதிகளை ஆய்வு செய்வதற்கான நிபுணர்கள் குழு, கிழக்கு மாகாணம், ஆளுநர் செயலகம், உவர்மலை, திருகோணமலை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டப்படுகிறார்கள்.
No comments