Breaking News

அடங்காச் சோனி ஆசாத் சாலி என்று அழைக்கலாமா ?

அடங்கா தமிழன் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அடங்கா சோனி என்று கேள்விப்பட்டோமா ?

ஆசாத் சாலியின் அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலும் எனக்கு உடண்பாடில்லை. இயக்க வெறி காரணமாக எமது சகோதரர்களை காட்டிக்கொடுத்ததில் அவர் முதன்மையானவர்.

சஹ்ரானை காண்பித்து அரசியல் செய்தவர்களில் அவரும் ஒருவர். ஆனால் அவரது துணிச்சல் பாராட்டத்தக்கது.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஆசாத் சாலி அவர்களுக்கு எதிராக அமைச்சர் விமல் வீரவன்ச அவர்கள் தனது வழமையான இனவாத சிந்தனையின் அடிப்படையில் பெரும்பான்மை சமூகத்தை தூண்டும் விதத்தில் விமர்சனம் செய்திருந்தார்.

விமலின் விமர்சனத்துக்கு ஆசாத் சாலி அவர்கள் கொடுத்த விளக்கம் மிகவும் பாராட்டத்தக்கது. எமது முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் பெட்டிப்பாம்பாக அடங்கியிருக்கின்ற இன்றைய காலசூல்நிலையில் ஆசாத் சாலியின் துணிச்சல் பாராட்டத்தக்கது.

அடித்தால் திருப்பி அடிக்க வேண்டும். அடியை வாங்கிக்கொண்டு வந்தால் அது எமது பலயீனம். இந்த பலயீனம் இருக்கும் வரைக்கும் எதிரி எமக்கு தொடர்ந்து அடிப்பான். 

அடிக்கின்றவனுக்கு எப்போது நாங்கள் திருப்பி அடிக்கின்றோமோ அப்போதுதான் அவன் மீண்டும் அடிப்பதற்கு அச்சப்படுவான்.

எனவே விமல் வீரவன்சவின் மிரட்டலுக்கு பயப்படமால் அடங்கா சோனியாக நெஞ்சை நிமிர்த்தி விமலை விவாதத்திற்கு அழைத்த ஆசாத் சாலி பாராட்டப்பட வேண்டியவர்.

முகம்மத் இக்பால்



No comments

note