Breaking News

காரைதீவில் நடைபெற்ற சத்திய பிரமாண நிகழ்வு

நூருல் ஹுதா உமர் 

"நாட்டைக் கட்டியெழுப்பும் சுபிட்சத்தின் நோக்கு " எனும் தொனிப்பொருளில் அமைந்த பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருவத்திற்கு அமைவாக மலர்ந்துள்ள  2021 ம் ஆண்டு கடமைகளைத் தொடங்கும் முதல் நாளான இன்றைய தினம்  சுபவேளையில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனின் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு அதனைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 

மேலும் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த சகலரையும் நினைவு கூரும் முகமாக 2 நிமிடம் மெளனஅஞ்சலி செலுத்தப்பட்டதுடன் 2021ஆம் ஆண்டின் கடமைகளை பொதுமக்களுக்கு நிறைவேற்றுவதற்காக அனைத்து உத்தியோகத்தர்களும்  அமைச்சினால் வெளியிடப்பட்ட உறுதிமொழிக்கமைவாக  சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.











No comments