முஸ்லிம்களை இலக்கு வைக்காதீர்கள்! இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) இலங்கைக்கு வேண்டுகோள்!
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் Organization of Islamic Cooperation (OIC) பொதுச் செயலகம் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வெறுப்புப் பேச்சு மற்றும் இனவாதப் போக்கு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா கொவிட் 19 வைரஸ் பரவலை வைத்து முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்கப்படுவது குறித்தும் தனது ஆழ்ந்த கவலையை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் உடல்களை அதிகாரிகள் தகனம் செய்ததாகவும், இந்த நடைமுறைகளை நிராகரித்த சமூக உறுப்பினர்களை கைது செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) முஸ்லிம்களின் உரிமைகளை இலக்கு வைக்கும் அனைத்து கொள்கைகளையும் நடைமுறைகளையும் நிராகரிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளது.
மேலும், முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், முஸ்லிம்களின் மத நடைமுறைகள் மற்றும் சடங்குகளை மதிக்கவும், அவர்களின் கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை வளர்ப்பதற்குப் பின்னால் இருக்கும் அனைத்து தரப்பினருக்கும் எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இலங்கைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
No comments