நல்லாந்தழுவை நிவாரண சங்கத்தினால் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு
மதுரங்குளி பகுதியில் முஸ்லிம்கள் செறிந்து வாழக்கூடிய
நல்லாந்தழுவை கிராமத்தில் மனிதநேயத்தோடு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கொவிட்- 19 என அழைக்கப்படும் கொரோனா வைரசினால் இந்த புனித ரமழான் மாதத்திலும் மக்களின் ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு நல்லாந்ழுவை கிராமத்திற்கு உட்பட்ட நான்கு சிறிய பள்ளிவாயல்களும் நல்லாந்தழுவை பெரிய பள்ளிவாயலின் கீழ் ஒன்றினைந்து நல்லாந்தழுவை நிவாரண சங்கம் (Nallandaluwa Relief Society) என்ற அமைப்பை உருவாக்கி ஊர் மக்களிடம் மாத்திரம் சுமார் 4,000,000/= நாட்பது இலட்சம் ரூபாய் நிதிகளை சேகரித்து சுமார் 600 குடும்பங்களுக்கு 6000/= ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நல்லாந்தழுவை நிவாரண சங்கமானது நல்லாந்தழுவை கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட மூவின மக்களையும் உள்ளடக்கி மல்லம்பிட்டி கிராம மக்களையும் இணைத்துக் கொண்டு நிவாரண பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments