மக்களின் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு மருந்து வழங்கும் நிகழ்வு.
மக்களின் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு மருந்துகள் வழங்கும் நிகழ்வு 11/04/2020 ஆம் திகதி சனிக்கிழமை காலை கனமூலை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
புத்தளம் தள வைத்திய சாலைக்கு கிளினிக் செல்லும் நபர்களால் சென்ற வாரம் ஒப்படைக்கப்பட்ட கிளினிக் புத்தகத்திற்கான மருந்து வகைகளை கனமூலை, பெருக்குவட்டான் ஆகிய கிராம மக்களுக்கு சுமார் 155 நபர்களுக்கு மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டது.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் மக்கள் பல அசௌகரியங்களை சந்திக்கின்றனர் இதனை கருத்தில் கொண்டு புத்தளம் தள வைத்திய சாலை வைத்திய அதிகாரி Dr சுமித் அத்தநாயக்க அவர்களின் பணிப்புரையின் கீழ் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் செயலாளர் எச்.எம். சபீக் அவர்களின் மேற்பார்வையில் மருந்துகள் வினியோகிக்கப்பட்டது.
மேலும் புத்தளம் நகரம், நாகவில்லு, நுரைச்சோலை, 04ம் கட்டை,
நிந்தனி, மணல் குன்று, ரத்மல்யாய,
அல் ஜித்தா கிராமம், மற்றும் தில்லையடி ஆகிய இடங்களிலும் மருந்துவகைகள் வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments