பொதுநலன் கருதி ஒரு அறிவித்தல்!!!!
இப்போது கொழும்பில் வாழும் தமிழ் , முஸ்லிம் மக்களின் வீட்டுத் தொலைபேசிகளுக்கு ஒரு அழைப்பு வருகிறது....
பொலிஸ் உயரதிகாரிகளின் அலுவலகத்தில் இருந்து அந்த அழைப்பு எடுக்கப்படுவதாகவும் வீட்டில் உள்ள ஒருவரின் தொலைபேசி கடந்த வருட உயிர்த்த ஞாயிறு தினமன்று நடைபெற்ற தாக்குதல்களின் சம்பந்தப்பட்ட ஒருவரின் தொலைபேசியுடன் தொடர்புபட்டுள்ளதாகவும்
இதனால் அவரை கைது செய்ய வேண்டுமெனவும் அதை தடுக்க வேண்டுமானால் குறிப்பிட்ட காசை ஈஸி கேஷ் முறையில் வைப்பிலிடுமாறும் கேட்கப்படுகிறது..
அசல் அச்சாக பொலிஸ் அதிகாரிகள் பேசுவது போல சிங்களத்திலும் பின்னர் தமிழிலும் அவர்கள் பேசுகின்றனர்.
தெரிந்தோ தெரியாமலோ நாம் யாருடனாவது பேசியிருப்போம் என்று நம்பிப் பயந்த சிலர் பணத்தை ஈஸி கேஷ் அவர்களுக்கு வழங்குகின்றனர்.
பின்னர் அந்த தொலைபேசி அழைப்பு வராமல் போகிறது.
இதுதான் கதை...
இப்படி வந்த அழைப்பொன்று குறித்து கொட்டாஞ்சேனையில் போன வாரம் கேள்விப்பட்டேன்..
பின்னர் நேற்று வத்தளை பகுதியில் ஒருவருக்கு அழைப்பு சென்றுள்ளது. கொட்டாஞ்சேனை ஆட்கள் அலெர்ட் ஆகி தப்பிவிட்டனர்.வத்தளையில் ஒருவர் பணத்தை இழந்திருக்கிறார்..
நாளை பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளார்.
ஏற்கனவே இப்படி இழந்தவர்கள் வெட்கம் காரணமாக சொல்லாமல் கூட இருக்கக் கூடும்...
இந்த விவகாரம் குறித்து தேடிப் பார்த்ததில், சிறைக்குள் இருந்து கைதிகள் சிலர் போலியான பெயர்களில் உள்ள சிம்களை வைத்து யாரோ ஒரு தரப்பின் உதவியுடன் இதனை செய்கின்றனர்.
ஏற்கனவே அப்படி நடந்தவற்றை தேடிப் பார்த்த பொலிஸாருக்கு இதுதான் விடையாக கிடைத்துள்ளது..
பொலிஸ் ஒருவரை விசாரிக்க வேண்டுமானால் உங்கள் வீட்டுக்கு வருவார்கள்..
அல்லது பொலிசுக்கு வரச் சொல்வார்கள்... அதைவிடுத்து ஈஸி கேஷில் பணம் அனுப்பி பிரச்சினையில் இருந்து தப்பிக் கொள்ளச் சொல்லமாட்டார்கள்...
யாரும் அப்படியான தொலைபேசி அழைப்பை எடுத்தால் அச்சப்படாதீர்கள்... நேரே பொலிஸ் நிலையத்திற்கு வருவதாக கூறி எந்த பொலிஸ்
எத்தனை மணிக்கு என்று கேளுங்கள்...
அதைவிடுத்து யார் உங்களை பயமுறுத்தினாலோ அவசர தொலைபேசி 119 அல்லது 0112 -421111 என்ற பொலிஸாரின் உதவியை நாடுங்கள்...
மேலும் யாரும் பாதிக்காமல் இருக்கவே இந்தப் பதிவு..
No comments