ஜனாஸா அறிவித்தல் - அஷ்ஷைக் அல் அபுல் ஹசன் (மதனி) காலமானார்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
பொலன்னறுவையை பிறப்பிடமாகக் கொண்டவரும் கொழும்பு மர்கஸில் இயங்கிவரும் ரஷாதிய்யா அரபுக் கல்லூரியின் உப அதிபருமாகிய மௌலானா அபுல் ஹஸன் மதனீ அவர்கள் இறைவனது நியதியின் படி வபாத்தாகிவிட்டார்கள்.
இவர் பல நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பெரும் ஆலிம் மட்டுமல்லாது, பல்வேறுபட்ட நிறுவனங்கள், கலாசாலைகளது ஆலோசகராகவும் விளங்கியவராவார். இவர் அக்ரம் மதனீ, ஆஷிக் ரஷாதீ ஆகிய ஆலிம்களது தந்தையுமாவார்.
அன்னாரின் இழப்பினால் தவிக்கும் அன்புக் குடும்பத்தாருக்கு வல்ல அல்லாஹ் பொறுமையை வழங்க வேண்டுவதுடன், மௌலானா அபுல் ஹஸன் மதனீ அவர்களது மண்ணறை வாழ்க்கை சிறக்கவும் பிரார்த்தனை புரிகிறோம்.
اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم ابدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعذه من عذاب القبر ومن عذاب النار
Azhan Haneefa
No comments