Breaking News

🇱🇰வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலம் ஏப்ரல் 20 வரை நீடிப்பு🇱🇰

🌐 MADURAN KULI MEDIA🌐
Monday, April 13, 2020

கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஊழியர்கள் வீடுகளில் இருந்து வேலை செய்யும் காலம் ஏப்ரல் 20 திங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

மேலும் புத்தாண்டு காலப்பகுதியில் சம்பிரதாயங்கள் மற்றும் தொடர்புகளை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

செய்தி ஆசிரியர்
 S.M.M.SHAFAQ
   (JAWADHI)



No comments