Breaking News

நீர்கொழும்பு - அன்சார் ஹோட்டலில் வன்முறை; ஒருவர் மரணம்!

நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் அமைந்துள்ள இரவு உணவகமான அன்ஸார் ஹோட்டலில் இன்று இரவு 9.45 மணியளவில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இருவர் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

வேனில் வந்து தகராறில் ஈடுபட்டவர்கள் வெட்டிக் கொலை செய்தபின்னர் தப்பிச் சென்றுள்ளனர். ஹோட்டல் ஊழியர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த இடத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

Credit:Thamilan.lk






No comments