புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளராக எம்.ஏ.௭ம். அனீஸ் அவர்கள் பொறுப்பேற்பு
புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளராக எம்.ஏ.எம். அனீஸ் அவர்கள் (SLEAS) நேற்று (11/03/2020) தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர் புத்தளத்திருந்து திறந்த போட்டி பரீட்சை மூலம் இலங்கை கல்வி நிருவாக சேவைக்கு முதலாவது நியமனம் பெற்றவராவார். கணித பாட கல்வி பணிப்பாளராக கடமையாற்றும் இவர் தமிழ் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் சேவையற்றியவர்.
இவர் இதற்கு முன்னர் விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், உயர்தர எந்திரவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுக்கும் உதவி கல்வி பணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இவரின் முதலாவது ஆசிரியர் நியமனமாக கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயம் அமையப்பெற்றது. பேராதெனிய பல்கலைக்கழத்தின் எம்.ஏ பட்டப்படிப்பை நிறைவு செய்த இவர், கொழும்பு பல்கலை கழகத்தில் BIT டிப்ளோமாவையும் பூர்த்திசெய்துள்ளார்.
தெற்கு கோட்ட பணிப்பாளராக பணியாற்றிய திரு ஆர்.பீ நிமல் சிறி அவர்களின் ஓய்வை தொடர்ந்து தற்பொழுது பணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
இவர் பாத்திமா கல்லூரியின் முன்னாள் அதிபர் அபூபைதா அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Puttalamonline.com

No comments