JobVibe.lk - Sri Lanka Job Portal

முஸ்லிம்கள் சார்பான ஒரு தொகை நிவாரண நிதி பேராயரிடம் கையளிப்பு

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் சர்வதேச நிகழ்ச்சி நிரலாகவே பார்கப்பட வேண்டும் என நான் நம்புகிறேன் என பேராயர் காடினல் மல்கம் ரஞ்சித்  தெரிவித்தார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி முஃப்தி தலைமையிலான குழுவினர் கடந்த 25ஆம் திகதி சனிக்கிழமை பேராயரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைகள் பற்றியும், தொடர்ந்தும் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்ப எவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்ற பல விடயங்கள் பற்றியும் குறித்த சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.

அதன் போது முஸ்லிம்களின் தற்போதைய நிலை பற்றியும் றிஸ்வி முப்தியினால் விளக்கப்பட்டது.

எதிர்காலத்தில் இது தொடர்பாகவும் தாம் சம்பந்தப்பட்ட தரப்போடு பேசுவதாகவும் பேராயர் காடினல் மல்கம் ரஞ்சித்  தெரிவித்தார்.

இதன்போது குண்டு வெடிப்பில் பாதிக்கப்ட்ட மக்களின் நிவாரணப் பணிகளுக்காக முஸ்லிம்கள் சார்பாக ஒரு தொகை நிதி வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த சந்திப்பில் ஜம்இய்யாவின் பிரதித் தலைவர் அஷ்-ஷைக் ஏ.சீ. அகார் முஹம்மத், உதவிச் செயலாளர் அஷ்-ஷைக் தாஸிம், ஊடகச் பேச்சாளர் அஷ்-ஷேக் பாஸில் பாறூக், கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளன பிரதிநிதிகளாக அல்-ஹாஜ் இஸ்மாயில் மற்றும் அல்-ஹாஜ் அஸ்லம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال