JobVibe.lk - Sri Lanka Job Portal

மருதம் கலைக்கூடல் மன்றத்தினால் இளம் கலைஞர் விருது பெற்ற பிறை எப்.எம். அறிவிப்பாளர் ஏ.எல். நயீம் பாராட்டி கௌரவிப்பு!.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இம்முறை (2026) இளம் கலைஞர் விருது பெற்ற பிறை எப்.எம். வானொலியின் சிரேஷ்ட அறிவிப்பாளரும் ஆசிரியருமான ஏ.எல். நயீம் மருதம் கலைக்கூடல் மன்றத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் மாதாந்த அமர்வு மருதம் கலைக்கூடல் மன்றத் தலைவரின் இல்லத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மன்றத்தின் தலைவர் கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலானாவின் தலைமையில் இடம்பெற்ற வேளை, இவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி, அதிதிகள் புடை சூழ  கௌரவம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் றஷ்மி மூஸா விசேட அதிதியாகக் கலந்து கொண்டதோடு, மன்றத்தின் செயலாளர் சித்தி ஜெஸீனா, பிரதித் தலைவர் பல்துறைக்கலைஞர் என்.எம். அலிக்கான், பொருளாளர் எம்.ஐ. நளீம்,  மூத்தகவிஞர் கேயெம்ஏ அஸீஸ், கவிஞர் பாசக்கவி பாயிஸ் கரீம், பல்துறைக் கலைஞர் ஏ.எல்.அன்ஸார், கவிஞர் எஸ். ஜனூஸ், ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர்,  அறிவிப்பாளர் ஐ.ஜாபீர், சிரேஷ்ட ஊடகவியலாளர் யூ.கே. காலிதீன், சமூக சேவையாளர் சஜான், கவிஞர் சுபையில் அஸீஸ், சத்தார், பாடகர் ஜிப்ரி,  ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். ஸாகிர், ஒய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் நிஸ்றீன் உட்பட மன்றத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

இதன் போது மன்றம் மேற்கொண்டு வரும் சிறப்பான சேவைகள் குறித்து பாராட்டி பேசப்பட்டதுடன் மன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

























Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال