JobVibe.lk - Sri Lanka Job Portal

ஹிஸ்புல்லாஹ்வும் காத்தான்குடியும்.!

✍️ எஸ். சினீஸ் கான்

​இலங்கை வாழ் முஸ்லிம்களின் இதயங்களில் காத்தான்குடி என்ற ஊருக்கு எப்போதும் ஒரு தனித்துவமான இடமும் பெருமதிப்பும் உண்டு. ஆன்மீக வழிகாட்டல், கல்வி வளர்ச்சி, வர்த்தகத் துறை, சமூக ஒருங்கிணைப்பு எனப் பல தளங்களில் காத்தான்குடி காட்டிவரும் முன்னுதாரணம், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் ஒரு பெருமிதமான அடையாளம்.

​இந்த மகத்தான வளர்ச்சிக்குப் பின்னால், ஊரை வழிநடத்திய ஆளுமையின் உழைப்பும் தொலைநோக்குப் பார்வையும் முதன்மையான காரணியாக நிற்கிறது. ஒரு நகரின் முறையான நிர்வாகத்திற்கும், அதன் முழுமையான கட்டமைப்புப் பாதுகாப்பிற்கும், தொலைநோக்கு திட்டமிடலுக்கும் தகுதியான தலைமை எவ்வளவு அவசியம் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தனது செயற்பாடுகளின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

"ஒரு ஊரின் உயர்வும் தாழ்வும் அதன் சரியான தலைமையிலேயே தங்கியிருக்கிறது" என்பதற்கு இணங்க, அர்ப்பணிப்புமிக்க சேவையால் ஒரு பிரதேசத்தை சர்வதேச அளவில் பேச வைக்கும் உயரத்திற்கு உயர்த்த முடியும் என்பதை அவர் சாதித்துக் காட்டியுள்ளார்.

காத்தான்குடி அடைந்துள்ள இந்த அபிவிருத்திகளும் சர்வதேச சாதனைகளும் இத்துடன் நின்றுவிடாமல், ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தொலைநோக்கு வழிநடத்தலில் மேலும் புதிய சிகரங்களை எட்ட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

​தொழில்நுட்பம், பொருளாதாரம், உயர்கல்வி, சமூக நல்வாழ்வு என அனைத்துத் துறைகளிலும் காத்தான்குடி மென்மேலும் முன்னேறி, எதிர்கால தலைமுறையினருக்கு வழிகாட்டும் ஒரு முதன்மைச் சமூகமாக மிளிர இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.




Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال