JobVibe.lk - Sri Lanka Job Portal

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான ‘USS TULSA’ போர்க்கப்பல் விநியோக மற்றும் சேவைகள் நிமிர்த்தம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

அமெரிக்க ஐக்கிய நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான ‘USS TULSA (LCS 16)’ போர்க்கப்பல், விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக புதன்கிழமை (2026 ஒக்டோபர் 07) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினரால் அக்கப்பல் கடற்படை மரபுகளுக்கேற்ப வரவேற்கப்பட்டது.

இவ்வாறு கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள Littoral Combat வகையைச் சேர்ந்த ‘USS TULSA (LCS 16)’ கப்பலின் நீளம் 127.7 மீட்டர்களாகும். இக்கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் BM Wanier செயற்பட்டு வருகின்றார்.

மேலும், 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி சேவையில் இணைக்கப்பட்ட ‘USS TULSA (LCS 16)’ கப்பல், அப்போதிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கடற்படையில் சேவையில் ஈடுபட்டு வருகின்றது. இதற்கு முன்னரும், 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி, இக்கப்பல் இலங்கைக்கு வருகை தந்திருந்தது.













Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال