குருணாகல் திவுரும்பொல காசீம் வித்தியாலயத்தில் மிக நீண்ட நாட்கள் குறைபாடாக காணப்பட்ட பேண்ட் வாத்திய கருவிகளை முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான உயர் நீதிமன்ற சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா பாடசாலை நிர்வாகத்திடம் அண்மையில் வழங்கி வைத்தார்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பரின் 2026 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுமார் இரண்டு இலட்சம் பெறுமதியான கருவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் அதிபர் இத்ரீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர், உயர்நீதிமன்ற சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா மற்றும் கட்சியின் அமைப்பார் ஷாம் மௌலானா, முன்னாள் அதிபர் ரபீக், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.





