எம்.யூ.எம்.சனூன்
"நீர்ப்பாசனத்தின் பெருமை எமது உரிமை" எனும் குளங்களை புனரமைக்கும் அரசாங்கத்தின் திட்டம் நாத்தாண்டிய பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் பிரகாரம் ஐந்து குளங்களைப் புனரமைக்கும் பணிகள் கட்டுநேரியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மீகஹவெவ பகுதி குளத்தின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்ததன் மூலம் தொடங்கப்பட்டது.
வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் "நீர்ப்பாசனத்தின் பெருமை எமது உரிமை" எனும் அரசின் தேசியத் திட்டத்தின் கீழ், அப்பகுதி விவசாயிகளின் நீர் தேவைகளை நிரந்தரமாகப் பூர்த்தி செய்வதற்கும், நீர்ப்பாசன அமைப்புக்கு புத்துயிர் அளிப்பதற்கும் ஒரே நேரத்தில் ஐந்து குளங்களைப் புனரமைக்கும் மாபெரும் திட்டத்தின் தொடக்க விழாவே இடம்பெற்றுள்ளது.
நீண்ட காலமாக முறையான புனரமைப்பு இல்லாமல் இருந்த மீகஹ குளம், மீப்பா குளம், புலுகஹ குளம், தெரக்கட குளம் மற்றும் செம்புக்குலிய குளம் ஆகிய ஐந்து குளங்கள் இவ்வாறு நவீனமயமாக்கப்பட்டு, விவசாயிகளின் விவசாயப் போராட்டத்திற்கு தீவிரமாகப் பங்களிக் வழி வகுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கக் கட்சியின் பிரதி அமைப்பாளர் கயான் ஜானக, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான், நாத்தாண்டிய பிரதேச சபையின் தலைவர் சாகர விஜேசேகர, மத்திய கட்டுநேரியப் பிரதேச சபையின் உறுப்பினர் அலெக் பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் கயான் ஜானகவின் தனிப்பட்ட செயலாளர் நிலங்க நாரங்கொட, நாத்தாண்டிய பிரதேச செயலாளர், பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் மற்றும் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் சகோதரத்துவத்துடனும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
நீர்ப்பாசனப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து நிலத்தைப் பண்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு வலுவூட்டும் உண்மையான, மக்கள் நலன் சார்ந்த புரட்சி அரசாங்கத்தினால் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.










