JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பதவியை இழந்தார் முன்னாள் தவிசாளர் இன்பாஸ்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச சபையில் இரு உறுப்பினர்களுடன் அங்கம் வகிக்கும் சர்வஜன அதிகாரம் (பதக்கம்) கட்சியின் உறுப்பினர் உறுப்புரிமையிலிருந்து  அபூபக்கர் முஹம்மது இன்பாஸ் என்பவரை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து கற்பிட்டி பிரதேச சபையில் ஒரு உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளது. என புத்தளம் மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் அறிவித்துள்ளது 

2026/09/28 ம் திகதி கற்பிட்டி பிரதேச சபைக்கான தெரிவத்தாட்சி அதிகாரி எஸ் எல்.ஆர் ஜயநாயக்க கையொப்பமிட்டு சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மேற்படி வெற்றிடம் ஏற்பட்டுள்ள உறுப்பினர் பதவிக்கு ஒரு மாத காலத்திற்குள் ( அதாவது 3026/10)28 ம் திகதிக்குள்) புதிய ஒருவரின் பெயரை பரிந்துரை செயாயுமாறும் வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال