(எம்.யூ.எம்.சனூன்)
மாதம்பை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் க.பொ.த உயர்தரப் பிரிவு மாணவர்களினால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட மிளகாய் பயிர்ச்செய்கைத் திட்டத்தின் முதற்கட்ட அறுவடை விழா (02) வெள்ளிக்கிழமை பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எஸ்.எல்.அன்வர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உயர்தரப் பிரிவு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு அறுவடைப் பணிகளை முறைப்படி ஆரம்பித்து வைத்தனர்.
மாணவர்களிடையே விவசாய ஆர்வத்தை ஊக்குவிக்கவும், நடைமுறைச் சார்ந்த சுயதொழில் முயற்சிகளைப் பயிற்றுவிக்கவும் நோக்கத்தோடு இத்திட்டம் உயர்தரப் பிரிவினால் ஆரம்பிக்கப்பட்டது.
பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த விவசாய முயற்சி மற்றும் மாணவர்களின் கூட்டு உழைப்பை அதிபர் மற்றும் சமூகத்தினர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.



