JobVibe.lk - Sri Lanka Job Portal

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சட்டத்தரணிகள் அமைப்பு உருவாக்கப்பட்டது.

பாறுக் ஷிஹான்

கட்சியின் முக்கியஸ்தர்கள், முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் பங்கேற்பு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட பிரிவாகக் கட்சியின் சட்டத்தரணிகள் அமைப்பு மிகக் குறுகிய காலத்திற்குள் உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டு, அதன் முதலாவது கட்டக் கலந்தரையாடலும் அறிமுக நிகழ்வும் கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில்  மருதமுனை மூன் விலேச் ரெஸ்டுரெண்ட்  மண்டபத்தில் இன்று(3) நடைபெற்றது.

குறுகிய கால அழைப்பினை ஏற்றுப் பெருமளவிலான சட்டத்தரணிகள், கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்,   முஸ்லிம் காங்கிரஸின் சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர்  , முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பொத்துவில் பிரதேச சபை  தவிசாளருமான சட்டத்தரணி எம்.எஸ்.எம். முஷாரஃப், சட்டத்தரணி ஷிபான் மஃரூப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பைஸல் காசிம்,  மற்றும் பிரதிச் செயலாளர் நாயகம் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், சிரேஷ்ட சட்டத்தரணிகளான  அன்சார் மௌலானா உட்படப் பல சட்டத்தரணிகள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

நிகழ்வின் நன்றியுரையைத் தொடர்ந்து, கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் சட்டத்தரணிகளுக்கான விசேட கலந்தரையாடலொன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது நாட்டின் தற்போதைய சட்ட மற்றும் சமூக-அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், கட்சியின் சட்ட ரீதியான அணுகுமுறைகள் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






























Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال