JobVibe.lk - Sri Lanka Job Portal

கிழக்கு ஆழ்கடலில் விபத்துக்குள்ளான மீனவர் ஒருவர் கடற்படையினரின் உதவியுடன் கரைக்கு அழைத்து வரப்பட்டார்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கைக்கு கிழக்கே ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் விபத்தினால் ஆபத்தான நிலையில் இருந்த உள்நாட்டு பலநாள் மீன்பிடி படகொன்றின் மீனவர் ஒருவரை, கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை (2026 ஒக்டோபர் 01) இரவு அவசரமாக கரைக்கு அழைத்து வந்து, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

2026 செப்டம்பர் 26 ஆம் திகதி தெவுந்தர மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்ட ‘துலாஜ் புதா’ எனும் பலநாள் மீன்பிடி படகு, இலங்கைக்கு கிழக்கே சுமார் 24 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் விபத்தில், அப்படகில் இருந்த மீனவர் ஒருவரின் வலது கையின் விரல்களில் காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக கரைக்கு அழைத்து வர தேவையான உதவியை வழங்குமாறும், மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தினால் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது.

அதன்படி, குறித்த மீனவரை கடற்படை படகிற்கு ஏற்றிக்கொண்ட பின்னர், அவருக்கு முதற்கட்ட முதலுதவி சிகிச்சை அளித்து, அவசரமாக திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வந்து, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க இலங்கை கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கைக்கு உரித்தான கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் அனர்த்தங்களுக்கு உள்ளாகும் கடற்பயணிகள் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை கடற்படையினர் எப்போதும் தயார்நிலையில் உள்ளனர்.









Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال