JobVibe.lk - Sri Lanka Job Portal

கடற்படையின் சமூக சேவைப் பங்களிப்புடன் புனரமைக்கப்படும் மூதூர் முஸ்லிம் மகளிர் வித்தியாலயம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கொழும்பு ரோயல் கல்லூரியின் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கிழக்குக் கரையோர பழைய மாணவர் அமைப்பின் நிதிப் பங்களிப்புடனும், இலங்கை கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கைவினைப் பங்களிப்புடனும் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் வசதிகள் வியாழக்கிழமை (2026 ஒக்டோபர் 01) மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டன.

அதன்படி, கொழும்பு ரோயல் கல்லூரியின் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கிழக்குக் கரையோர பழைய மாணவர் அமைப்பின் நிதிப் பங்களிப்புடனும், கிழக்கு கடற்படை கட்டளையின் தொழில்நுட்ப மற்றும் கைவினைப் பங்களிப்புடனும் மூதூர் முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடங்கள் மற்றும் சுகாதார வசதிகள் இவ்வாறு மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வு, இலங்கை கடற்படைக் கப்பல் விதுர நிறுவனத்தின் கட்டளை அதிகாரியும், திருகோணமலை (தெற்கு) கடற்படை பொறுப்பதிகாரியாகப் பதில் கடமையாற்றுபவருமான கெப்டன் ரவிந்து ஹரிச்சந்திர தலைமையில், குறித்த பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.













Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال