(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் எம் ஏ எம் றிஸிகானின் வழிகாட்டலின் கீழ் உதவி அதிபர் எம் ஏ எம் றிஷாத் தலைமையில் இடம்பெற்றது
பாடசாலை மாணவர்களின் திறமைகளை வெளிக்கொனரும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்வுகள் என பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
மேலும் இன்றைய சிறுவர் தின நிகழ்வை முன்னிட்டு பாடசாலையின் சகல மாணவர்களுக்கும் இனிப்பு பண்டங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.





