JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் கல்லடியில் இடம்பெற்ற உலக முதியோர் தின நிகழ்வு!.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

முதியோர் என்பவர்கள் நம் வாழ்வின் வழிகாட்டிகள், அனுபவத்தின் பொக்கிஷங்கள், அன்பின் உறைவிடங்கள். உங்கள் ஆசீர்வாதம் என்றும் எம்மோடு இருக்கட்டும்!

தம்மன்னாகம, போதிராஜபுர, கல்லடி மற்றும் நெலும்வெவ ஆகிய கிராமங்கள் இணைந்து ஏற்பாடு செய்த உலக முதியோர் தின கொண்டாட்டம் புத்தளம் கல்லடியில்  வியாழக்கிழமை (01.10.2026)  சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி குழு தலைவருமான எம்.ஜே.எம் பைசல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் அத்தோடு புத்தளம் பிரதேச சபையின் உறுப்பினர்  ரஜிதா, புத்தளம் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு ஜயதிலக, புத்தளம் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர்களான திருமதி பத்மா பாலசூரியா மற்றும் திருமதி நிலாந்தி, முன்னாள் புத்தளம் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி மாலினி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் 

நான்கு கிராமங்களின் அரசாங்க உத்தியோகத்தர்கள், சனச வங்கி அதிகாரிகள், வர்த்தக பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் இன்றைய நாளின் கதாநாயகர்களான நான்கு கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முதியவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

















Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال