எம்.யூ.எம்.சனூன்
வண்ணாத்திவில்லு பிரதேச செயலக பிரிவுக்கட்பட்ட மயிலங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் வறிய குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர வீடு ஒன்றை (05) திங்கட்கிழமை, தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.ஜே.எம்.பைசல் கையளித்தார்.
உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு "தமக்கென ஒரு இடம், அழகான வாழ்க்கை" எனும் அரசாங்கத்தின் வீட்டுத்திட்ட உதவியில் கீழ் இந்த வீடு கையளிக்கப்பட்டுள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இந்த வீடு, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிர்வாக உத்தியோகத்தர் ஆர்.குமாரசிங்க, வண்ணாத்திவில்லு பிரதேச தலைமை கிராம உத்தியோகத்தர் திருமதி ஏ.எம்.என்.துஷாரி சூரியஹெட்டி, வீட்டுத்திட்ட உத்தியோகத்தர் சம்பத், வண்ணாத்திவில்லு அமைப்பாளர் பத்திரன, புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் இஸ்ஸதீன் கியாஸ், மயிலங்குளம் அமைப்பாளர் அசோக, கிராமத்தின் அரச உத்தியோகத்தர்கள், பிரஜா சக்தி தலைவர் கயான், கட்சி உறுப்பினர்கள், பிரஜா சக்தி உறுப்பினர்கள், பயனாளிகள் மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.








