JobVibe.lk - Sri Lanka Job Portal

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்  மாணவி தனுஷ்காவிற்கு ‘அமரர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்’

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், ஊடகக் கற்கைகள் துறையில்  சிறப்புத் தேர்ச்சி பெற்ற திருகோணமலையைச் சேர்ந்த மாணவி தனுஷ்கா சஞ்ஜீவவிற்கு, ஊடகத்துறையின் உயரிய கௌரவமான 'அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்' வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை ஒன்பது அமர்வுகளாக நடைபெற்று வரும் யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாளான இன்று (07.10.2026), இந்த மதிப்பார்ந்த தங்கப் பதக்கம் மாணவி தனுஷ்காவிற்கு வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

யாழ். இந்துக் கல்லூரியின் 2004ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களான அவரது சக பாடசாலை நண்பர்களால் “நிலா நிதியம்” உருவாக்கப்பட்டது. இந்நிதியத்தின் ஊடாக, யாழ். பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குக் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இத்தங்கப் பதக்கம் வழங்கி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

விருது வென்ற மாணவி தனுஷ்காவின் ஊடகப் பயணம்:

திருகோணமலை, புனித மரியாள் கல்லூரியின் பழைய மாணவியான தனுஷ்கா சஞ்ஜீவ, 2019 உயர்தரப் பரீட்சையில் திருகோணமலை மாவட்டத்தில் 10ஆம் இடத்தைப் பெற்று யாழ். பல்கலைக்கழகத்தில் நுழைந்தார். ஊடகத்துறை மீதான தீராத தாகத்தால் அதனைச் சிறப்புக் கலையாகக் கற்ற அவர், தற்போதைய 43ஆம் அணியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

தனது கற்கை நெறியின் போது, திருகோணமலை விவசாயக் கிராம மக்கள் எதிர்கொள்ளும் யானை-மனித மோதல் தொடர்பான ஆழமான ஆவணப்படத்தைத் தயாரித்தமை மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செய்தி மற்றும் நிகழ்ச்சிப் பிரிவுகளில் திறம்படப் பணியாற்றியமை போன்ற பல செயன்முறை அனுபவங்களை அவர் தன்னகத்தே கொண்டுள்ளார். இவரின் சிறப்பான கல்வித் திறனால், தற்போது ஊடகக் கற்கைகள் துறையிலேயே தற்காலிக உதவி விரிவுரையாளராகப் பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

தங்கப் பதக்கம் குறித்து மாணவி தனுஷ்காவின் நெகிழ்ச்சியான பதிவு:

தமக்குக் கிடைத்த இந்த உயரிய விருது குறித்துப் பகிர்ந்துகொண்ட மாணவி தனுஷ்கா சஞ்ஜீவ, தனது உணர்வுகளைப் பின்வருமாறு வெளிப்படுத்தினார்:

"சமூகத்தின் கண்ணாடியாகவும் மக்களின் குரலாகவும் திகழும் ஊடகங்களின் இயல்பையும், அதன் தாக்கத்தையும் எனக்கு ஆழமாகக் கற்றுத்தந்த ஊடகக் கற்கைகள் துறைக்கு முதற்கண் எனது நன்றிகள். விரிவுரையாளர்களின் வழிகாட்டல்களும், ஊடகத் துறைசார் ஆளுமைகளின் அனுபவப் பகிர்வுகளுமே எனது அறிவுப்புலத்தை மேலும் விஸ்தரிக்க உதவின.

"எனது கல்விக்கும், இலட்சியப் பயணத்திற்கும் எப்போதும் உற்ற துணையாக நிற்கும் எனது பெற்றோர் மற்றும் கணவருக்கும், என்னை முன்னகர்த்திய ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் மற்றும் விரிவுரையாளர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்.







Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال