JobVibe.lk - Sri Lanka Job Portal

இனம் தெரியாத நபருடைய ஜனாஸா புத்தளம் நகரில் செவ்வாய்க்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

எம்.யூ.எம்.சனூன்

கடந்த செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி, வீழ்ச் செயார் சைக்கிளில் ஊதுபத்தி வியாபாரம் செய்து வந்த நபர் ஒருவர் புத்தளத்தில் ஜனாஸாவாக மீட்கப்பட்டிருந்தார்.

எனினும் இவர் யாரென தெரியாத நிலையில், இவரது ஜனாஸா புத்தளம் ஜனாஸா நலன் புரிச்சங்கத்தினரால் குருநாகல் வைத்தியசாலை குளிரூட்டி அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இவரை அடையாளம் காண உதவுமாறு புத்தளம் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தினரால் ஊடகங்களில் இவருடைய புகைப்படம் வெளியிடப்பட்டு தகவல் கோரப்பட்டிருந்தன.

எனினும் யாரும் இந்த ஜனாஸாவை இனங்காட்டவோ அல்லது பொறுப்பேற்கவோ முன் வராததால் புத்தளம் ஜனாஸா நலன்புரிச்சங்கத்தினரின் முயற்சியில், சட்டபூர்வமான முறையில் ஜனாஸா குருநாகலில் இருந்து செவ்வாய்க்கிழமை (06) மாலை புத்தளத்திற்கு எடுத்து வரப்பட்டு அஸர் தொழுகையுடன், புத்தளம் பகாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.





Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال