எம்.யூ.எம்.சனூன்
வண்ணாத்திவில்லு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரைத்தீவு வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் வறிய குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர வீடு ஒன்றை (05) திங்கட்கிழமை தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.ஜே.எம்.பைசல் கையளித்தார்.
உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு அரசாங்கத்தின் "தமக்கென ஒரு இடம், அழகான வாழ்க்கை" எனும் வீட்டுத்திட்டத்தின் கீழ் இந்த வீடு கையளிக்கப்பட்டுள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடு, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிர்வாக உத்தியோகத்தர் ஆர்.குமாரசிங்க, வண்ணாத்துவில்லு பிரதேச செயலாளர் ஆர்.பிரபாகரன், வீட்டுத்திட்ட உத்தியோகத்தர் சம்பத், தேசிய மக்கள் சக்தியின் குழுத் தலைவரும், வண்ணாத்துவில்லு பிரதேச சபை உறுப்பினருமான சுரங்க, வண்ணாத்துவில்லு அமைப்பாளர் பத்திரன, வண்ணாத்துவில்லு பிரதேச சபை உறுப்பினரும், பிரஜா சக்தி தலைவருமான நஸீருர் ரஹ்மான், வண்ணாத்திவில்லு பிரதேச சபை உறுப்பினர் பிரியந்த, புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் இஸ்ஸதீன் கியாஸ், கிராமத்தின் அரச உத்தியோகத்தர்கள், கட்சி உறுப்பினர்கள், பிரஜா சக்தி உறுப்பினர்கள், பயனாளிகள் மற்றும் கிராமவாசிகள் கலந்துகொண்டனர்.




