(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படையினரால், சனிக்கிழமை (2026 ஒக்டோபர் 04) நீர்கொழும்பு செத்தப்பாடுவ களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட பீடி இலைகள் அடங்கிய ஒரு தொகுதி கைப்பற்றப்பட்டு, சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, மேற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பல் கெளணி நிறுவனத்தினால், நீர்கொழும்பு செத்தப்பாடுவ களப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நிலையில் காணப்பட்ட ஒரு டிங்கி படகு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, குறித்த படகில் ஒரு (01) உறையில் பொதியிடப்பட்டிருந்த 37 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளுடன், அந்த ஒரு (01) டிங்கி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மேலும், இந்த நடவடிக்கையின்போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் அடங்கிய தொகுதி மற்றும் டிங்கி படகு ஆகியவை, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.



