JobVibe.lk - Sri Lanka Job Portal

குருநாகல் சாஹிரா கல்லூரியில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள்.

எம்.யூ.எம்.சனூன் 

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, குருநாகல் சாஹிரா கல்லூரியில் சிறுவர் தினத்தன்று, சிறுவர் தின நிகழ்வுகள் மிகச் சிறப்பாக இடம் பெற்றன. 

பாடசாலை அதிபர் கே.டீ.ஹாரூன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாசாலைக்கு சமூகமளித்த மாணவர்கள் அதிபரினால் பெஜ்கள் அணிவித்து வரவேற்கப்பட்டதோடு பல்வேறு போட்டி நிகழ்வுகளிலும் பங்கேற்றனர்.

இதன் போது அன்றைய தினம் அனைவருக்கும் மதிய போஷனமும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்விற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கிய கல்லூரியின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை உத்தியோகத்தர்கள், பெற்றோர், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், கல்வி அபிவிருத்தி குழுவினர், ஹெல்பிங் ஹேன்ட்ஸ், ஐடேக் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் அதிபர் ஹாரூன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்.



















Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال