எம்.யூ.எம்.சனூன்
சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையம் நடாத்தவுள்ள 73வது மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகளுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன.
போட்டிகளுக்கு விண்ணப்பித்து தெரிவு செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும், பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் அஹதிய்யா பாடசாலைகளின் போட்டியாளர்களுக்கும் உரிய முறையில் இதற்கான அனுமதி இலக்கங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையத்தின் தஃவா மற்றும் மத விவகார குழுவின் தவிசாளர் சித்தீக் முஹம்மது சாஷ்லி தெரிவித்துள்ளார்.
இதுவரையும் அனுமதி இலக்கங்கள் கிடைக்கப்பெறாத போட்டியாளர்கள் போட்டி நடைபெறுவதற்கு மூன்று தினங்களுக்கு முன்பாக (அக்டோபர் 07 ம் திகதிக்கு முன்) சித்தீக் முஹம்மது ஷாஸ்லி அவர்களுடன் 0773578986 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
