(எம்.யூ.எம்.சனூன்)
உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு (05) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் தரம் 6, 7, 8 மாணவர்களிடையே நடாத்தப்பட்ட கட்டுரை போட்டியில் குருநாகல் ஸாஹிரா மாதிரி மகா வித்தியாலயத்தில் தரம் 7 ஈ இல் கல்வி கற்கும் மாணவன் முஹம்மது ஆகிப் தேசிய மட்டத்தில் வெற்றியீட்டி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இம்மாணவனுக்கு வழி காட்டி, பயிற்சிகளை வழங்கி, ஊக்கமளித்த ஆசிரியை அஸ்லமியா மற்றும் மாணவனின் பெற்றோர்களுக்கு பாடசாலை அதிபர் கே.டீ.ஹாரூன் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இவருக்கான பரிசளிப்பு நிகழ்வுகள் அலரி மாளிகையில் (05) இடம்பெற்றது.
இதேவேளை மாணவன் ஆகிபுக்கு அதிபரோடு இணைந்து பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர், நலன் விரும்பிகள், பள்ளி நிர்வாகத்தினர் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


