எம்.யூ.எம்.சனூன்
மாராவில மருத்துவமனையின் சுகாதார சேவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவசரகால நோயாளி பராமரிப்புக்கான அதி நவீன அம்ப்யூலன்ஸ் வண்டி ஒன்று பொதுமக்களின் சேவைக்காக வழங்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக, அவசரகால சிகிச்சை மற்றும் நோயாளி போக்குவரத்து சேவைகளை மேலும் திறம்படச் செய்யும் நோக்கத்தில், மாரவில தள மருத்துவமனைக்கு இந்த புதிய அம்ப்யூலன்ஸை ஒப்படைக்கும் சிறப்பு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இது நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்து, அவசரகால பேரிடர் மற்றும் நோயாளி பராமரிப்பு சேவைகளை ஒட்டு மொத்தமாக மேம்படுத்துவதற்குப் பெரிதும் உதவும்.
அரசாங்கக் கட்சியின் பிரதி அமைப்பாளரும், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கயான் ஜானக, நாத்தாண்டிய பிரதேச சபையின் தலைவர் சாகர விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர் கயான் ஜானகவின் தனிப்பட்ட செயலாளர் நிலங்க நரங்கொட, மாவட்ட மருத்துவ கண்காணிப்பாளர் திமுத் பொன்வீர, மாரவில மருத்து வமனையின் மருத்துவ கண்காணிப்பாளர், சிறப்பு மருத்துவர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் இந்தப் பெருமை மிக்க நிகழ்வில் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் பங்கேற்றனர்.
மக்களுக்கு மரியாதைக்குரிய மற்றும் திறமையான இலவச சுகாதார சேவையை உறுதி செய்யும் ஒரு உண்மையான மக்கள் சார்ந்த சுகாதார மறுமலர்ச்சி தேசிய மக்கள் அரசாங்கத்தில் வரவிருக்கிறது.






