எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் சவீவபுரத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கான மத்திய நிலையத்தில் பயிலும் மாணவர்களுடன், சிறுவர் தின நிகழ்வுகளை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தொடர்ச்சியாக நான்காவது முறையாகவும் யூத் விஷன் அமைப்பினர் சிறுவர் தின நிகழ்ச்சிகளை வெகு சிறப்பாக நடத்தினர்.
இதன்போது அங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களையும், சிற்றுண்டிகளையும் யூத் விஷன் அமைப்பினர் வழங்கி அவர்களை மகிழ்வித்தனர்.
பரிசுகளை பெற்றுக்கொண்ட மாணவர்களின் முகத்தில் காணப்பட்ட புன்முறுவல், நெகிழ்ச்சியான ஒரு தருணமாக அமைந்திருந்தது.
இந்நிகழ்வை சிறப்பாக வழி நடத்திய மத்திய நிலையத்தின் ஆசிரியர்களுக்கு யூத் விஷன் அமைப்பினர் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
யூத் விஷன் அமைப்பு என்பது புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் குழுக்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.








