எம்.யூ.எம்.சனூன்
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, புத்தளம் இஜ்திமா மைதானத்தில் இயங்கி வரும் தாருல் குர்ஆன் அல்கரீம் அரபுக்கல்லூரி மாணவர்கள் புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்குக்கு (01) விஜயம் செய்தனர்.
விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள், அரங்கில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகத்தில் நீச்சல் போட்டி மற்றும் பயிற்சிகளிலும் கலந்து கொண்டனர்.
புத்தளம் நேச்சர் கழகத்தின் தலைவரும், நீச்சல் பயிற்றுவிப்பாளருமான ஏ.எல்.எம்.ஹிசாம்கான் நீச்சல் பயிற்சிகளை வழங்கினார்.
சிறுவர் தினத்தில் மாணவர்கள் பல விளையாட்டு போட்டிகளில் மும்முரமாக கலந்து கொண்டு அவர்களது சந்தோசத்தை வெளிப்படுத்தினர்.
அரபுக்கல்லூரி அதிபரும், புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா பிரதி தலைவருமான அஷ்ஷெய்க் இம்.இஸட்.சௌக்கி பஹ்ஜியின் தலைமையில் உஸ்தாதுமார்களான அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.சாஜித் (ஹசனி), அஷ்ஷெய்க் எம்.என்.எம்.சியாஸ் (மனாரி) ஆகியோர் மாணவர்களை அழைத்து சென்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு, நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.












