JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் பீச் வொலிபோல் மைதானம் நவீன புட்சால் மைதானமாக மாற்றம் பெறுகிறது.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் கொழும்பு வீதியில் இதுவரை காலமும் மங்கி மறைந்து கிடந்த, பீச் வொலி போல் மைதானமாக பயன்படுத்தப்பட்டு வந்த இடம் தற்போது புதிய தோற்றம் பெறுகிறது.

புத்தளம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மதின் முயற்சியின் பலனாக குறித்த மைதானத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ், இவ்விடம் நவீன புட்சால் மைதானமாக நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், இதுவரை இருள் சூழ்ந்து காணப்பட்ட அந்தப் பகுதி மின்னொளி வசதியுடன் பாதுகாப்பானதும், அழகியதுமான ஒரு இடமாக மாற்றப்படவுள்ளது.

இதன் மூலம் நகரின் நுழைவுப் பகுதி மேலும் ஒழுங்கான, பாதுகாப்பான மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال