JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி புதுக்குடியிருப்பு அன்டஜபல் விளையாட்டு கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடர்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி புதுக்குடியிருப்பு அன்டஜபல் விளையாட்டு கழகம்  நடாத்தும் உதைபந்தாட்ட தொடர் எதிர்வரும் 18 ம் திகதி முதல் 20 ம் திகதி வரை கற்பிட்டி ஹமாஸா விளையாட்டு மைதானத்தில் பகல் இரவு ஆட்டங்களாக நடைபெற உள்ளது.

நாடு தழுவிய ரீதியில் இருந்து பிரபல அணிகள் கலந்து கொள்ள உள்ள இச் சுற்றுப் போட்டி 7 ஏ சைட் திறந்த போட்டிகளை  கொண்டது  செம்பியனாக தெரிவு செய்யப்படும் அணிக்கு இரண்டு இலட்சம் ரொக்கமும் கேடயமும் இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ஒரு இலட்சம் ரொக்கமும் கேடயமும் வழங்கப்படுவதுடன் சிறப்பாட்டக்காரர், தொடர் ஆட்ட நாயகன் மற்றும் சிறந்த கோல் காப்பாளர் விருதுகளும் வழங்கப்பட உள்ளதாக கழகத்தின் தலைவர் ஏ.எம் அன்பாய் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال